அத்தகைய பணம் குற்றம் சாட்டப்பட்டவருக்கு எதிரான ஒரு முக்கியமான ஆதாரமாகும், இது நீதிமன்ற விசாரணையின் போது பயன்படுத்தப்படும். இது ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்ககத்தால் கைப்பற்றப்பட்டு குற்றப்பத்திரிகையுடன் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படுகிறது. விசாரணையின் முடிவில், புகார்தாரருக்கு பணத்தை திருப்பித் தர நீதிமன்றம் உத்தரவிடும். எனவே, விசாரணை முடிந்த பின்னர், இந்த பணம் புகார்தாரருக்குத் திருப்பித் தரப்படுகிறது. இருப்பினும், நீதிமன்றத்தில் பணத்தை வைப்பீடு செய்வதால் புகார்தாரர் எதிர்கொள்ளும் சிரமங்களைக் கருத்தில் கொண்டு, விசாரணை நீதிமன்றத்திற்கு அவர் வரும்போது, புகார்தாரருக்கு பொறிவைந்து பிடிப்பதற்கு பயன்படுத்ப்படும் பணத்திற்கு சமமான பணத்தைத் திருப்பி செலுத்துவதற்கான நடைமுறையை ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்ககம் வகுத்துள்ளது. இத்தகைய வழக்குகளில், புகார்தாரரிடமிருந்து ஒரு ஒப்பந்தத்தைப்பெறும் நடைமுறை மேற்கொள்ளப்படுகிறது. இரசாயனம் தடவப்பட்ட கறைபடிந்த லஞ்சப் பணம், வழக்கு முடிவிற்கு பின்னர், பொது கருவூலத்தில் வைப்பீடு செய்யப்படுகிறது.