திரு. அபை குமாா் சிங், இ.கா.ப.,
காவல்துறை இயக்குனர்
நிகழ்கால சமூகம் எதிர்கொள்ளும் மிகப்பெரிய சவால்களில் ஊழலும் ஒன்றாகும். இது நல்லாட்சியை வலிமையற்றதாக்குவதுடன் பொதுக் கொள்கையைச் சிதைத்து, நாட்டின் வளங்கள் விரயமாக வழிவகுப்பதுடன் வளர்ச்சியையும் தடுக்கிறது. அனைத்திற்கும் மேலாக, கையூட்டை அளிக்க இயலாத நிலையில் உள்ளவர்களுக்கே, ஊழல் அதிகப் பாதிப்பை ஏற்படுத்துகிறது. இருப்பினும், பொதுவாக பொதுமக்களின், அதிலும் குறிப்பாக, அறிவார்ந்த குடிமக்களின் ஒத்துழைப்புடன் ஊழலை பெறுமளவில் கட்டுப்படுத்த இயலும். ஊழலின் பல்வேறு பரிமாணங்கள், ஊழலைச் சமாளிக்க, ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை இயக்குநரகத்தால் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் மற்றும் சட்ட விதிகள் குறித்து மக்களுக்கு எடுத்துரைப்பதற்கும் ஒரு முயற்சியே இந்த வலைத்தளமாகும்.
திருக்குறள் - அறத்துப்பால் : குறள் 171
"நடுவின்றி நன்பொருள் வெஃகின் குடிபொன்றிக்
குற்றமும் ஆங்கே தரும்"
விளக்கம் :
நடுவு நிலைமையின்றி பிறரது நல்ல பொருளைக் கவர ஆசை கொண்டால் அந்த ஆசை அவனது குடியைக் கெடுக்கும், அப்பொழுதே குற்றமும் வந்து சேரும்.