தமிழ்நாடு ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை, உங்கள் ஆலோசனைகளை வரவேற்கிறது. மேலும் இந்த இணையதளத்தின் வழியே உங்களுடன் தொடர்புகொள்ள ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது.
மாநில அரசு துறைகள் மற்றும் மாநில பொதுத்துறை நிறுவனங்களில் ஊழல் தொடர்பான தகவல்களை,தமிழ்நாடு ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புதுறை வரவேற்கிறது. இணையதளத்தின் வழியே இந்த தகவல்களை அனுப்பலாம்.
தகவல் தருபவர்களின் அடையாளம், அவர்கள் விருப்பத்திற்கேற்ப இரகசியமாக வைக்கப்படும்.
தமிழ்நாட்டின் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு துணை காவல் கண்காணிப்பாளர் தலைமையில் ஒரு பிரிவு அலுவலகம் செயல்படுகிறது. அங்கு எழுத்துப்பூர்வமாக புகார் அளிக்க முடியும். புகாரை தபால், தொலைநகல், அல்லது மின்னஞ்சல் முலமாகவும் அனுப்பலாம்.
+91-44-22321090 / 22321085 / 22310989 / 22342142
+91-44-22321005
dvac@nic.in
DVAC Headquarters, No.293, MKN Road, Alandur, Chennai–600 016.