கண்காணிப்பு செயல்பாடுகள்

❝ Fight corruption
if you want a better society! ❞

தகவல் சேகரிப்பு


━━━━ ☘ ━━━━

பல்வேறு துறைகளில் நடைபெறும் முறைகேடுகள் மற்றும் ஊழல் நடவடிக்கைகள் குறித்த தகவல்களை சேகரிப்பது ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை இயக்கக்கத்தின் முக்கிய கடமைகளுள் ஒன்றாகும். அனைத்து துறை தலைவர்களும் பொதுத் துறை நிறுவனங்களும் 50 இலட்சம் ரூபாய் மற்றும் அதற்கு மேற்பட்ட மதிப்பிலான அனைத்து திட்டங்கள், திட்டப்பணிகள் அல்லது ஒப்பந்த தீர்வுகள் குறித்து ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்ககத்திற்கு தெரிவிக்க வேண்டும். இதனால், அத்தகைய திட்டங்கள் / திட்டப்பணிகளைச் செயற்படுத்துவதில் ஏதேனும் முறைகேடுகள் அல்லது ஊழல்கள் நடைபெறுகிறதா என்பதை கண்டறிவதற்காக, அவற்றை இவ்வியக்ககம் கண்காணிக்கும். பிற துறைகளிலிருந்து பெறப்படும் இத்தகைய தகவல்கள், கண்காணிப்பிற்காக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறையின், சம்பந்தப்பட்ட மாவட்ட பிரிவிற்கு தெரிவிக்கப்படும்.

திடீர் சோதனைகள்


━━ ☘ ━━

சில நேரங்களில், அரசு அலுவலகத்தில் நடைபெற்றுகொண்டிருக்கும் ஊழல்கள் குறித்து வரபெற்ற நம்பகமான தகவலைச் சரிபார்க்கும் வகையில், ஊழல் நடைபெறுகிறது என்று சந்தேகிக்கப்படும் இடங்களில், துறை அதிகாரிகள் அல்லது மாவட்ட ஆய்வுக்குழு அலுவலர்களுடன் இணைந்து ஊழல் தடுப்பு மற்றும் விழிப்புப்பணி இயக்கக அதிகாரிகள் கூட்டு திடீர் சோதனைகள் நடத்தப்படுகின்றன. எடுத்துக்காட்டாக, சோதனைச் சாவடிகளின் நுழைவு பகுதிகளில் நடத்தப்படும் திடீர் சோதனைகள் ஆதாரமில்லா பணம் எடுத்துச் செல்லப்படுவதைக் கண்டுபிடிக்க உதவும். அத்தகைய பணம், சட்டத்திற்கு புறம்பான வகையில் பெறப்பட்ட தொகை என்றே கருதப்பட்டு (வாகன ஓட்டுநரை விட்டுவிட்டு) விசாரணைக்கு பின்னர் வழக்கு தொடரப்படும். சில நேரங்களில், சேமிப்பு கிடங்குகளில் நடத்தப்பட்ட திடீர் ஆய்வுகள், இருப்பு விவரங்களைக் காட்டிலும் சரக்குகள் குறைவாக இருப்பதைக் கண்டறிவதற்கு வழிவகுக்கும். இதனால், மேற்கொண்டு விசாரணை மேற்கொள்ள வேண்டியது அவசியமாகும்.

❝ Honest people become away
from corruption.❞

விழிப்பு அறிக்கைகள்


━━ ☘ ━━

ஊழலுக்கு எதிரான பணியில் உறுதியான தகவல்களை சேகரிப்பதற்கு, ஆதாரங்கள் குறித்த அறிக்கைகள் மிகவும் இன்றியமையாததாகும். பின்வரும் வகையிலான ஊழல் மற்றும் முறைகேடுகளில் விழிப்புப்பணி தகவல்கள் சேகரிக்கப்படுகின்றன. அவையாவன:-

(அ) தொகுதி A மற்றும் B குழு அலுவலர்கள் அளவில் ஊழல்
(ஆ) அரசுக்கு நிதி இழப்பு ஏற்படுத்திய ஊழல் நடவடிக்கைகள்
(இ) பெருமளவிலான தொகையை உள்ளடக்கிய ஊழல் நடவடிக்கைகள்
(ஈ) சம்பந்தப்பட்ட அரசு பரிவர்த்தனைகளுடன் தொடர்புடைய ஆவணங்களில் உள்ள சாட்சியத்தால் வெளிப்படக்கூடிய ஊழல்கள் மற்றும்
(உ) பெரும் எண்ணிக்கையிலான பொது மக்களை பாதிக்கக்கூடிய மற்றும் அதன் வாயிலாக அரசின் மீதான மதிப்பை குறைக்கும் ஊழல் நடவடிக்கைகள்.

உள் கண்காணிப்பு அமைப்பு


━━ ☘ ━━

பெரும்பாலான பொதுத்துறை நிறுவனங்கள் தங்கள் நிறுவனங்களில் நடக்கும் ஊழல் நடவடிக்கைகளைக் கண்காணிப்பதற்கு உள் கண்காணிப்பு அமைப்புகளை கொண்டுள்ளன. ஊழல் தொடர்புடைய குறிப்பிட்ட நிகழ்வுகள் அல்லது முதல் நோக்கில் சாட்சியம் கண்டறியப்படும் நேர்வில், வழக்குகளை முழுமையான விசாரணைக்காக அவர்கள் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநரகத்திற்கு அனுப்புகிறார்கள்.

❝ We will do our part so
corruption will be caught.❞

ஊழல் தடுப்பு கண்காணிப்பு


━━ ☘ ━━

புலனாய்வுகள் மற்றும் விசாரணைகளின் போது, அமைப்புகளில் நிலவும் தப்பிக்கும் வழிகளையும் செயல்பாட்டு முறைகேடுகளையும் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநரகம் கண்டறிகிறது. ஊழல் நடக்கக்கூடிய பகுதிகளும் கண்டறியப்பட்டுள்ளன. இத்தகைய அனுபவ அறிவின் அடிப்படையில், அமைப்பை திறம்பட மேம்படுத்துவதற்கான திருத்த நடவடிக்கைகளைத் தொடங்குவதற்கான பரிந்துரைகள் அடங்கிய அறிக்கைகள் அரசுக்கு அனுப்பப்படுகின்றன. இதன் வாயிலாக இனிவருங்காலத்தில் ஊழல்செயல்பாடுகளுக்கான வாய்ப்பு கணிசமாக குறைக்கப்படுகிறது.