நிறுவன அமைப்பு

Vigilance Head Quarters Building

தலைமையகம்

ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை இயக்குநரக தலைமையகம் எண்.293, எம்.கே.என். சாலை, ஆலந்தூர் , சென்னை- 600016 என்ற முகவரியில் அமைந்துள்ளது. ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை இயக்குநரகம், காவல் துறைத் தலைவரின் பதவித்தரத்திலுள்ள இணை இயக்குநர், காவல் துறைத் துணைத் தலைவர் பதவித்தரத்திலுள்ள துணை இயக்குநர் ஆகியோரின் உதவியுடன் காவல் துறைத் தலைமை இயக்குநர்/கூடுதல் காவல் துறைத் தலைமை இயக்குநர் பதவித்தரத்திலுள்ளவரால் தலைமை வகிக்கப்படுகிறது. தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களில் (வரைபடம் மற்றும் தகவல் தொகுதியில் அளிக்கப்பட்டுள்ளபடி) பரவியுள்ள விசாரணை அதிகாரிகளின் பணிகள் ஐந்து காவல் துறைக் கண்காணிப்பாளர்களால் கண்காணிக்கப்படுகின்றன. மேற்கூறியவற்றைத் தவிர, தேர்ந்தெடுக்கப்பட்ட பொதுப் பணியாளர்கள் தொடர்பான விசாரணைகள்/புலனாய்வுகளை கண்காணிக்க, காவல் துறை கண்காணிப்பாளர், ஊ.த.க.துறை இயக்குநரகம் ஒருவரின் உதவியுடன் இரண்டு காவல் துறைத் தலைவர்களின் கீழ், ஊ.தா.க இயக்குநரகம் சென்னையில் உள்ள இயக்குநரகத்தில், செயல்பட்டு வருகிறது. மேலும் இரண்டு புலனாய்வுப் பிரிவுகள் செயல்பட்டு வருகின்றன.

நிருவாகப் பிரிவு

ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை இயக்குநரத்தின் நிருவாகப் பிரிவு, 158 பணியாளர்களைக் கொண்டு ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை இயக்குநரத்தின் நிருவாகத்தைக் கையாளுகிறது. இந்த பிரிவினை இயக்குநர், இணை இயக்குநர், துணை இயக்குநர் மற்றும் வடக்கு சரக காவல் துறைக் கண்காணிப்பாளர் ஆகியோர் மேற்பார்வையில் கண்காணிக்கப்படுகிறது. நிருவாக அதிகாரி இந்தப் பிரிவின் தலைவராவார். ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை இயக்குநரகத்தின் அனைத்துக் கடிதப் பரிமாற்றங்களும், நிருவாகம் தொடர்பான அனைத்து விவகாரங்களும் நிருவாகப் பிரிவால் கவனிக்கப்பட்டு வருகிறது.

கமுக்கப்பிரிவு

ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை இயக்குநரகத்தின் கமுக்கப் பிரிவால் ஊழல் தொடர்பான இரகசிய விசாரணைகள்/வழக்குகள் கையாளப்படுகின்றன. இந்தப் பிரிவு, இயக்குநர், இணை இயக்குநர், காவல் துறை தலைவர், துணை இயக்குநர் மற்றும் ஐந்து சரகக் காவல் துறை கண்காணிப்பாளர்களால் மேற்பார்வையிடப்படுகிறது. இந்தப் பிரிவில் மேலாளர், கூடுதல் மேலாளர், 7 உதவி மேலாளர்கள் மற்றும் 32 சிறப்பு உதவியாளர்கள் உள்ளனர். வழக்குகள்/விசாரணைகள் தொடர்பான அரசு/விழிப்புப் பணி ஆணையர் மற்றும் துறை தலைமைகளுடன் தொடர்புடைய கடித பரிமாற்றம் ஆகியவை இந்தப் பிரிவால் கையாளப்படுகின்றன.

புலனாய்வுப் பிரிவு

ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை இயக்குநரகத்தின் புலனாய்வு பிரிவில் காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர்கள், காவல்துறை துணைக் கண்காணிப்பாளர்கள் மற்றும் காவல்துறை ஆய்வாளர்கள் பதவித் தரத்திலுள்ள காவல்துறை அதிகாரிகள் உள்ளனர். அவர்கள் மாநிலம் முழுவதும் பரவியுள்ள பிரிவு அலுவலகங்களில் பணியாற்றி வருகின்றனர். மேலும் பின்வரும் மாவட்ட தலைமையகங்களில், ஆய்வாளர்கள் பதவித்தரத்திலுள்ள விசாரணை அதிகாரிகள், ஏனைய துணைப் பணியாளர்களுடன் காவல் துறை கூடுதல் கண்காணிப்பாளர் அல்லது துணை காவல் கண்காணிப்பாளரால் தலைமை வகிக்கப்படுகிறது:

சென்னை நகர சரகம் வடக்கு சரகம் மத்திய சரகம் தெற்கு சரகம் மேற்கு சரகம் சிறப்புப் புலனாய்வுப் பிரிவு
சென்னை நகரம்-I காஞ்சிபுரம் திருச்சி மதுரை கேயம்புத்தூர் சிறப்புப் புலனாய்வுப் பிரிவு-I
சென்னை நகரம்-II திருவள்ளூர் கரூர் விருதுநகர் திருப்பூர் சிறப்புப் புலனாய்வுப் பிரிவு-II
சென்னை நகரம்-III வேலூர் பெரம்பலூர் தேனி ஈரோடு
சென்னை நகரம்-IV கடலூர் அரியலூர் தூத்துக்குடி நீலகிரி
சென்னை நகரம்-V விழுப்புரம் புதுக்கோட்டை இராமநாதபுரம் சேலம்
சென்னை நகர சிறப்பு பிரிவு-I திருவண்ணாமலை தஞ்சாவூர் சிவகங்கை தர்மபுரி
சென்னை நகர சிறப்பு பிரிவு-III செங்கல்பட்டு நாகப்பட்டினம் திண்டுக்கல் கிருஷ்ணகிரி
தலைமையிடம் திருப்பத்தூர் திருவாரூர் கன்னியாகுமரி நாமக்கல்
ராணிபேட்டை மயிலாடுதுறை திருநல்வேலி
கள்ளக்குறிச்சி தென்காசி
நிருவாகப் பிரிவு

சட்ட பிரிவு

புலனாய்வு பணியாளர்களைத் தவிர, நீதிமன்றங்கள் மற்றும் தீர்ப்பாயங்களில் வழக்குகளைத் நடத்தவும், ஆய்வுகள்/ விசாரணைகளில் சட்ட ஆலோசனைகளை வழங்கவும் 4 கூடுதல் சட்ட ஆலோசகர்கள், 34 துணை சட்ட ஆலோசகர்கள் மற்றும் ஒழுங்கு நடவடிக்கைகளுக்கான 6 வழக்கறிஞர்கள் அடங்கிய சட்ட பிரிவு இயங்கி வருகிறது. அலுவல் வழி சிறப்பு வழக்கறிஞர்களாக பணிபுரிந்தவர்களே, இந்த இயக்குநரகத்தின் சட்ட அதிகாரிகளாவர். அவா்களே ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை இயக்குநரகத்தால் விசாரிக்கப்பட்ட மற்றும் சிறப்பு நீதிபதிகளால் நடத்தப்படும் நீதிமன்ற விசாரணைகள் போன்ற, அவர்களே அனைத்து வழக்குகளையும் நடத்துவர்.

தொழில்நுட்பப் பிரிவு

இயக்குநரகத்தால் விசாரிக்கப்படும் தொழில்நுட்ப விவகாரங்கள் தொடர்புடைய வழக்குகளில், ஆலோசனை அல்லது உதவியை வழங்குவதற்கு, ஒரு மேற்பார்வை/செயற் பொறியாளர் ஒருவர் அடங்கிய தொழில்நுட்பப் பிரிவு ஒன்று உள்ளது. இது தவிர, பொதுப்பணி துறை, நெடுஞ்சாலைகள் துறை, சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்றுவாரியம் (CMWSSB), வனத்துறை, உள்ளூர் நிதி தணிக்கை, பல்வேறு பல்கலைக்கழகங்களின் பொறியியல் துறைகள், மாநில மற்றும் மத்திய அரசின் பகுப்பாய்வு ஆய்வகங்கள் போன்ற பல்வேறு துறைகளைச் சேர்ந்த வல்லுநர்களை தேவைக்கேற்ப, ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை இயக்குநரகம் பயன்படுத்திக் கொள்கிறது.